அரசுப்பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாமலே இருக்கின்றன. வழக்கமான ஆண்டாக இருந்தால் இந்நேரம் அரையாண்டுத் தேர்வுக்குத் தயாராகியிருப்பார்கள். இவ்வாண்டு தனியார்பள்ளிகளில் இணையம் மூலம் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நிலை என்ன? என்று தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மொடச்சூர், அயலூர், கோட்டுப்புள்ளாம்பாளையம், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.4 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, பால் உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டிடப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு இரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் தங்களின் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம். தேவையெனில் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Leave a Response