தமிழகத் திருநாள் சுவரொட்டிகள் கிழிப்பு – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

தமிழகத் திருநாள் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதற்காக காவல்துறைக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழகம் பிறந்த நாளான நவம்பர் முதல் நாளைத் தமிழகத் திருநாளாகக் கொண்டாடும் வகையில் அவரவர்கள் வீடுகளில் கொடியேற்றியும் கோலங்கள் இட்டும் இனிப்புகள் வழங்கியும் கொண்ட தமிழர் தேசிய முன்னணி ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று அபாயம் இருந்த காரணத்தினால் கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதைத் தவிர்த்தோம்.

ஆனால் இதற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட போது பல ஊர்களில் ஒட்டக் கூடாது என்று தடுத்தும் ஒட்டப்பட்டச் சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தும் காவல் துறையினர் அத்து மீறி செயல்பட்டுள்ளனர்.

தமிழக அரசே தமிழகத் திருநாளைக் கொண்டாடும் போது மக்கள் கொண்டாடுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் செயல்பட்ட காவல் துறையினரின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response