புதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்

மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரப் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 அவசரச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த சட்டங்களை தமிழக அரசும் எதிர்க்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இச்சட்ட முன்வடிவுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் அறிவித்துள்ளன.

ஆனால் தமிழக முதலமைச்சர் இச்சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவாகப் பேசிவருகிறார். இந்நிலையில் இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில் இச்சட்டங்களை எதிர்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது….

விவசாயிகளின் மீதும் விவசாயத்தின் மீதும் திணிக்கப்பட்டிருக்கும் பேராபத்தான தனியார் நிறுவன ஆதிக்க வியாபார முறை குறித்த மசோதாவை எதிர்க்கிறேன். வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயத்திற்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க மத்திய மாநில அரசுகள் துணைபோகக்கூடாது.
#saveAgriculture
#விவசாயம்காப்போம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response