இபாஸ் இரத்து – தமிழகத்தை முந்திய புதுச்சேரி

பொதுமக்கள் வெளியூர், வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு மிரட்டியிருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு இ- பாஸ் வழங்க வைத்துள்ள இணையதளம் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்கள் வெளியூர் செல்லவும், வெளி மாநிலங்கள் செல்லவும், பொருட்கள் கொண்டு செல்லவும், தனியாக அனுமதியோ, இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

வழக்கமாக இதுபோன்ற விசயங்களில் தமிழகம் முதலில் அறிவிக்கும் அதைப் பின்பற்றி புதுச்சேரி அரசு அறிவிக்கும்.இபாஸ் விசயத்தில் புதுச்சேரி அரசு தமிழகத்தை முந்திக்கொண்டு மக்களிடம் நற்பெயர் பெற்றுள்ளது என்கிறார்கள்

Leave a Response