30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இதை வரவேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இதை 30 ஆண்டுகளுக்கு முன்னரே திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அமல்படுத்தியவர் என்பதால் தீர்ப்பை திமுகவுக்குக் கிடைத்த வெற்றியாக வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு:

திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறேன்!

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே – 1989-ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை கருணாநிதி உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை திமுகவின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.

சமூகம் – பொருளாதாரம் – குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் செய்ததை இப்போதுதான் வடக்கில் செய்திருக்கிறார்கள் என்று தமிழக மக்கள் பெருமை கொள்கிறார்கள்.

Leave a Response