இபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு

ஏழாவது ஊரடங்கின்போது இபாஸ் கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தபோதும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. இ- பாஸ் பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் இடைத்தரகர்கள் மூலமாக இ பாஸ் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்படுவதாகவும் சமீப காலமாலகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை இனி தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது….

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது.

திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள்.

முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்!

இபாஸ் முறையை நீட்டித்து மக்களைத் துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஐந்தாவது மாதமாக அவசரத் தேவைகளுக்குக் கூட மக்கள் நகர முடியாமல் அல்லலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் இபாஸ் வழங்குவதில் தாராளமாக ஊழல் அரங்கேறிவருகிறது.ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் வித்திடும் வெளிப்படைத் தன்மை இல்லாத இபாஸ் ஊரடங்கில் யாருக்குப் பயன்படுகிறது?

அமைச்சர்களும் முதலமைச்சரும் போனால் போதும் வயிற்றுப் பிழைப்புத் தேடுவோர், இறுதிச்சடங்கில் பங்கேற்போர் கூட போகவேண்டியதில்லை என்ற முரட்டு மனநிலை அரசுக்கு அழகல்ல.

மத்திய அரசே இபாஸ் நடைமுறை கட்டாயம் இல்லை என்று அறிவித்த பிறகு அதிமுக அரசு உள்நோக்கத்துடன் வைத்திருப்பது ஏன்?

வேலைக்குப் போகலாம் கம்பெனிகள் திறக்கலாம் என அறிவித்துள்ள நிலையில் மக்களை வீட்டுக்குள்ளே முடக்கும் இபாஸ் கட்டாயம் என்று அறிவித்திருப்பது என்ன வகை கொரோனா நிர்வாகம்?

இபாஸ் நடைமுறை முற்றாகத் தோல்வி அடைந்துவிட்டது.செயற்கையான தடையை ஏற்படுத்தி ஊழல் முறைகேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்து மக்களை இன்னல் படுத்திட வேண்டாம்.இபாஸ் இனியும் தேவையற்றது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இந்தக் கருத்துக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்,

Leave a Response