மோடி அமித்ஷா மு.க.ஸ்டாலினுடன் பேச்சு – விவரம்

திமுக இன்று (ஏப்ரல் 5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, பிரதமர் மற்றும் கழக தலைவர் ஆகியோரிடையே நடைபெற்ற உரையாடல் விவரம்:

மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், இன்று காலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது “ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது என்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல்
தந்துள்ளார் என்றும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி ஆர் பாலு கலந்து கொள்வார்” என்றும் திமுக தலைவர் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தார்.

மேலும் “நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம்” என்றும் திமுக தலைவர் கூறினார்.

‘மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும்’ என்று பிரதமரிடம் திமுக தலைவர் கேட்டுக் கொண்டார். ‘மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது’ என்று பிரதமரும் உறுதி அளித்தார்!

திமுக தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். தயாளு அம்மையாரின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து திமுக தலைவரும் கேட்டறிந்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், திமுக தலைவரைத் தொடர்பு கொண்டு பேசினார்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response