சீன வைரஸ் என்று குற்றம் சொன்ன டிரம்ப் சீன அதிபருடன் ஆலோசனை

சீனாவின் வூகான் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவை மிரட்டி வருகிறது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இதை கொரோனா வைரஸ் என்று சொன்னதைவிட சீனவைரஸ் என்று சொன்னதுதான் அதிகம். அவ்வளவு நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில், சீனாவை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், ஜி ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்கிற செய்தி உலகநாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response