தமிழக உள்ளாட்சித் தேர்தல் – அதிகாரப்பூர்வ அட்டவணை

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி
உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

இதனால் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது தமிழக அரசு.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளதாக முதல்தகவல் தெரிவிக்கிறது.

டிசம்பர் 27: 1 ஆம் கட்டத் தேர்தல்

டிசம்பர் 30: 2 ஆம் கட்டத் தேர்தல்

டிசம்பர் 6: வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்

டிசம்பர் 13: வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்

டிசம்பர் 18: திரும்பப் பெற கடைசி நாள்

ஜனவரி 2, 2020: தேர்தல் முடிவு

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response