மோடிக்கு முட்டுக்கொடுக்கும் கமல் – மக்கள் விமர்சனம்

தமிழ்நாடு வந்துள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 10) சந்தித்தார். இதையடுத்து இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதில் ஒரு பகுதி…

#GoBackModi’ ஹாஷ்டேக் வருது என்ன கருத்தை அவர்கள் சொல்ல வருகிறார்கள்?

வா (COME) என்று சொல்லி வோட்டு போட்டதும் நாம் தான். வேலை செய்யவில்லை என்றால் அவரைப்பற்றி விமர்சனம் வைக்கலாம்.

‘Go Back Modi’, கோ பேக் என்று சொன்னால் அவர் வராமலேயே போய்விட்டால் அப்புறம்.

பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சொல்லவேண்டிய கருத்துக்களை, விமர்சனங்களை நாம் வைப்போம். அவங்க சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தாலும் தைரியமாக கருத்தை முன்வைப்போம்.

ஆனால் அது நேர்மையாக இருக்கவேண்டும். அவரைப்பற்றிய விமர்சனங்கள் நேர்மையாக இருந்தால் நேர்மையான தலைவனாக அதை எப்படி ஏற்றுக்கொள்ளவேண்டுமோ அதை மோடி ஏற்றுக்கொள்வார்.

இவ்வாறு கமல்ஹாசன் பதிலளித்தார்.

மக்கள் எதனால் இப்படிச் சொல்கிறார்கள்? என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்து மோடிக்கு முட்டுக் கொடுக்கிறார் என்கிற விமர்சனங்கள் வருகின்றன.

Leave a Response