ஜெயமோகனின் வக்கிரம்- பிரபாகர்.

நவீன தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகன் அளவிற்கு வக்கிரம் நிறைந்த இன்னொரு எழுத்தாளர் இல்லை..

இதை மெய்ப்பிக்கும் ஒரு சம்பவம் அவருடைய மஹாபாரத புத்தக வெளியீட்டு விழாவின் போது நடந்தது,

புத்தகத்தை கமல் சார், இசை ஞானி, அசோகமித்ரன், பி. கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.

புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதற்காக இயக்குனர் சார்லஸ், எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா, கடலூர் சீனு, நீயா நானா ஆன்டனி ஆகியோர் அழைக்கப் பட்டனர்.

அரங்கத்தில் இருந்த பலருக்கும்.. இவர்கள் மூவரும் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப் பட்டனர் என்ற குழப்பம் இருந்தது..

சார்லஸ், ஆன்டனி கிறிஸ்தவர்கள், ஜாகிர் ராஜா, முஸ்லிம், கடலூர் சீனு இந்து..

மேலோட்டமாகப் பார்த்தால்.. ஒரு இந்தியக் காவியத்தை முஸ்லிம் கிறிஸ்தவர் இந்து மூவரும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் மத ஒருமைப்பாட்டுடன் யோசித்திருக்கிறார் என்று தோன்றும்

இதில் அடிப்படையாக இரண்டு கீழ்மைகள் இருக்கின்றன….

சார்லஸோ, ஆண்டனியோ, கீரனூர் ஜாகிர் ராஜாவோ ஒரு போதும் தங்களை மதங்களால் அடையாளப் படுத்திக் கொண்டவர்கள் இல்லை..

அவர்களின் பெயர்களில் ஒரு மதம் இருக்கிறதே தவிர அவர்கள் ஒரு போதும் அந்த மதம் சார்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டவர்கள் இல்லை..அவர்கள் எப்பொழுதுமே அவர்களின் திறமைகளால் தகுதியால் அறியப்பட்டவர்கள்.. மதத்திற்கு அப்பாற் பட்டவர்கள். மதசார்பின்மையை கடைபிடிக்கிறவர்கள்

இவருடைய கேவலமான மத ஒருமைப்பாடு நாடகத்திற்கு அந்த மகத்தான மனிதர்களை துணை நடிகர்களாக பயன் படுத்தியிருக்க வேண்டியதில்லை..

இதில் இன்னொரு கீழ்மையும் இருக்கிறது..

கடலூர் சீனு ஜெயமோகனின் தொண்ரடிப்பொடி.. வெறும் பலியாடு.. டம்மியாக அந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டவர். அவரை நீக்கி விட்டால்.. இரண்டு கிறிஸ்தவர்கள் மற்றும் ஒரு முஸ்லிம்..

ஒரு இந்துத்துவப் பிரதியை இஸ்லாமிய கிறிஸ்தவர்களை தந்திரமாக ஏற்க வைக்கிற முயற்சி…

இதில் இன்னொரு கயமையும் இருக்கிறது!

சமீப காலமாக இந்தியா முழுவதும் பிஜேபி ஒரு தந்திரத்தை கையாள்கிறது..

தன்னுடைய இந்துத்துவ செயல்பாடுகளுக்கு மௌன சாட்சியாக ஒரு கிறிஸ்துவரையோ இஸ்லாமியரையோ மேடையில் ஏற்றி உடன் வைத்துக் கொள்வதுதான் அது..

ஜெயமோகன் அன்றைய தினத்தில் அவருடைய மஹாபாரத புத்தத்கதைதைப் பெற சார்லஸ், ஆண்டனி, மற்றும் கீரனூர் ஜாகீர் ராஜாவை மேடைக்கு ஏற்றியது அதைப் போன்ற ஒரு செயல்பாடுதான்..

இது போன்ற அரசியல் தந்திரங்களை ஆர்எஸ்எஸ் ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொள்கிறதா அல்லது ஜெயமோகன் ஆர்எஸ்எஸ்ஸிடம் இருந்து கற்றுக் கொள்கிறாரார என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!

மஹாபாரதம் இயல்பில் ஒரு இந்திய காவியம்தான்.. அது ஜெயமோகனால் எழுதப்படும்போது இந்துத்துவப் பிரதியாகிறது!-பிரபாகர்.

Leave a Response