பிகில் பட விழா தமிழக அரசு எதிர்ப்பு – விஜய் ரசிகர்கள் கோபம்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. சென்னை, மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் இந்த விழா நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தால் சுபஸ்ரீ மரணம் நடந்திருக்காது என்று பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கடுமையான எதிர்வினையாற்றினர்.

இந்நிலையில், ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது என்று உயர்கல்வித் துறை கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு உயர்கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் தொடர்பான பேச்சுகள் அடங்கிய விழாவை நடத்த கல்வி நிறுவனத்தில் இடம் உண்டா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பதிலளித்த கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் இருந்து தனியாக உள்ள அரங்கம் என்பதால், அரங்கத்தில் இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வால் விஜய் ரசிகர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response