கர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் சனநாயகப் படுகொலை

கர்நாடக மாநிலத்தில் மத்திய ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்த பாஜக, இப்போது கோவாவிலும் அதே வேலையைச் செய்துள்ளது.

கோவா மாநிலத்தில் 10 காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள்
(மொத்தம் 15 பேர்) தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து
பாஜகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதை
துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ உறுதி செய்துள்ளார்.

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் சட்டமன்ற சபாநாயகர் ராஜேஷ் பட்நாகரைச் சந்தித்து
தாங்கள் காங்கிரசுக் கட்சியை விட்டு விலகியதால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறி தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

ராஜினாமா குறித்த காரணம் பற்றி பனாஜி சட்டமன்ற உறுப்பினர் பாபுஸ் கூறும் போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்றவும் தொகுதி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி கருதியும்
பாஜக வில் தாங்கள் பத்து பேரும் இணைந்ததாகக் கூறியுள்ளார்.

பத்து சட்ட மன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து காங்கிரசு உறுப்பினர்கள் எண்ணிக்கை ஐந்தாகக் குறைந்துள்ளது.

ஆட்சியைப் பிடிக்கவும் பதவியைப் பறிக்கவும் ஜனநாயக வழியைத் தவிர மற்ற அனைத்து வழிகளிலும் பாஜக தனது திறமைகளைப் பயன்படுத்தி ஜனநாயக வழிமுறைகளைப் படுகொலை
செய்கிறது.

– சிவகுமார்

Leave a Response