பா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

வரலாற்றில் இருந்து படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். ரஞ்சித், தனது பார்வையில் ராஜராஜ சோழனின் காலத்தை இருண்ட காலமாகப் பார்க்கிறார்.

நாங்கள் அதைத் தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிக்க காலமாக அதைப் பார்க்கிறோம். ஆனால், பொற்காலம் என்று எதையும் நாங்கள் சொன்னதில்லை.

எவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் அருள்மொழிச் சோழன் என்கிற ராஜராஜ சோழன், அரசர்க்கரசன் எங்களுடைய பெருமைக்குரிய பாட்டன்தான்.

ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு, மணியரசன் ஆதாரப்பூர்வமாகப் பதிவுகளை எடுத்து வைக்கிறார்.

ஆனால் எங்களின் கேள்வி, நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல் இயக்குநர் ரஞ்சித், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதுதான்

இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார் சீமான்.

Leave a Response