2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்தார். பாராளுமன்றத்திலும் மூன்று இடங்களில் மட்டுமே வென்றார்.
தில்லியில் ஆட்சி செய்துவரும் அரவிந்த்கெஜ்ரிவால் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை.
கேரளாவில் ஆட்சி செய்துவரும் பினராயிவிஜயன் கட்சியும் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
மேற்குவங்காளத்தில் பாஜக 20 தொகுதிகளைப் பிடித்தது மம்தாவுக்குப் பெரும் பின்னடைவு.
அடுத்த பிரதமர் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல்காந்தி அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரசுக் கட்சி ஐம்பது தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது.
இந்நிலையில் இவர்கள் அனைவரையும் இந்தத் தேர்தலுக்கு முன்பாக சந்தித்துப் பேசியிருந்தார் கமல்.
அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டு தெய்வமே உங்களுக்கும் அந்த சக்தி இருக்கா? என்கிற கிண்டல் சமூக வலை தளங்களில் உலாவருகிறது.
அதாவது கமல் ஒருவரை சந்தித்துப் பேசினாலே அவர் தோற்றுவிடுவார் என்னும் பொருள்படும் இந்தக் கிண்டலை ரஜினி ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.