10 ஆண்டுகள் ஆன பின்பும் இவ்வளவு பயமா? – புலிகள் மீதான தடை குறித்து விமர்சனம்

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

”விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனவும் உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத தடைச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

1992 ஆம் ஆண்டு சட்ட விரோதநடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் மீது இந்தத் தடை விதிக்கப்பட்டது.27 ஆண்டுகளாகத் தொடரும் அந்தத்தடை இப்போது இன்னும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக சிங்கள அரசு சொல்லிவருகிறது.

மறைந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட ஒரு அமைப்புக்கு இன்னும் தடை தொடருகிறதா? அந்த அமைப்பின் மீது அவ்வளவு பயமா? என்கிற கேள்விகள் சமூகவலைதளங்களில் எழுப்பப் படுகின்றன.

Leave a Response