சன் ரைசர்ஸின் சிங்கம் டேவிட் வார்னர் கடைசி நாளிலும் சாதனை

ஐபிஎல் 12 – ஐதராபாத்தில் ஏப்ரல் 29 இரவு நடந்த 48 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அந்த 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 81 ரன்னும், மனிஷ் பாண்டே 36 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன் மட்டுமே எடுத்தது.

இதனால், ஐதராபாத் அணி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 79 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான், கலில் அஹமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

12 ஆட்டத்தில் விளையாடியுள்ள ஐதராபாத் அணிக்கு இது 6 ஆவது வெற்றியாகும்.

அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ள ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் (ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 611 ரன்) இந்த ஆட்டத்துடன் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தயாராவதற்காக தாயகம் (ஆஸ்திரேலியாவுக்கு) திரும்புகிறார்.

ஐபிஎல் பயணத்தின் நிறைவிலும் 56 பந்துகளில் 81 ரன் குவித்து அதிக ரன் எடுத்த வீரர் எனும் பெருமையுடன் விடைபெறுகிறார்.

Leave a Response