கடைசி நேரத்தில் கமலுக்குக் கூட்டணிக் கட்சி கிடைத்தது

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிடத் தயங்கி காங்கிரசு, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைக்க கமல் முயன்றார்.டிடிவி.திமகரனுடன் சேரப்போகிறார் என்றார்கள். கடைசியாக விஜயகாந்த் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடலாம் என்றும் பேச்சு வந்தது.

ஆனால் அவை எதுவும் நடக்காததால் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று திடீரென ஒரு கூட்டணி சேர்ந்துள்ளார் கமல்.வேட்புமனு தாக்கல் தொடங்கிய இந்த நாளில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், இந்தியக் குடியரசுக் கட்சி கூட்டணி அமைக்கிறது.

மக்களவை தேர்தலில் 1 தொகுதியிலும், இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்தியக் குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.

கடைசியாகக் கமலுக்கும் கூட்டணிக்கட்சி கிடைத்துவிட்டது.

Leave a Response