தேர்தலுக்குப் பின் கூட்டணி மாற்றமா? – மருத்துவர் இராமதாசு பேச்சால் சந்தேகம்

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததால், இதுவரை அக்கட்சி மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் எல்லாம் அக்கட்சிக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

இந்நிலையில் விழுப்புரம் வானூரில் பிப்ரவரி 23 அன்று நடந்த பாமக சிறப்புப் பொதுக்குழுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு பேசியதாவது….

7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதி என கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்ட பலரும் வயிறு எரிகின்றனர். பத்து தொகுதி கேட்டோம், கூட்டணி என்பதால் 7 மக்களவைத் தொகுதிக்கு ஒத்துக்கொண்டோம்.

ராஜ்யசபா எம்.பி. என்றால் இரு எம்.பி.களுக்குச் சமம்.

கண்ணியமான வளர்ச்சிக்கான அரசியல் புரிய வேண்டும். பிரச்சாரத்தில் யாரையும் குறை கூறாதீர். புழுதி வாரித் தூற்றினாலும், பதில் கூறக் கூடாது. பாசிட்டிவ் பிரச்சாரம் தேவை. கோபப்படாதீர்.

ராமதாசு சமூகப் போராளி, சிறப்பான கட்சி நடத்துகிறார். அக்கட்சிக்குதான் அதிகாரமுண்டு. அதுபற்றி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என வைகோ கூறியது மன ஆறுதலைத் தந்தது.

அன்புமணி கூறியதுபோல் 40 தொகுதிகள் மட்டுமல்ல, 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இக்கூட்டணி வெல்ல வேண்டும். ஜூன், ஜூலை உள்ளாட்சித் தேர்தலில் கை கோக்கும் நிலை பலப்படுத்தும்.

கண்ணியத்தோடு பேசுங்கள், பழகுங்கள். யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள். தேர்தல் முடிந்த பிறகு நாகரிகமாகப் பதில் சொல்வோம். அப்போதும் கண்ணியம் தவறக்கூடாது என்பது அன்புமணியின் கட்டளை. நாற்பதும் நமதே.

இவ்வாறு ராமதாசு பேசியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி என்றாலும் மற்ற கட்சிகள் விமர்சனம் செய்யவேண்டாம் என ராமதாசு பேசியிருப்பதும் தற்போதுவரை எதிரணியில் இருக்கும் வைகோவை பாராட்டிப் பேசியிருப்பதும் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிந்ததும் அணி மாற இப்போதே தொண்டர்களை தயார் செய்யும் விதமாக அவர் பேச்சு இருப்பதாக அரசியல் நோக்கர்கள்.

Leave a Response