கமல் பற்றிய செய்தியும் உடனடி மறுப்பும்

நடிகர் கமல் மக்கள் நீதிமய்யம் என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

பாஜகவின் பின்புலத்தில் அவர் இயங்கி வருவதாகவும் பாஜக அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகளைப் பிரித்து திமுக அணியைத் தோற்கடிக்கவே அவர் பயன்படுத்தப்படுகிறார் என்கிற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் மக்கள் நீதிமய்யம் இணைகிறது என்றும் அக்கட்சிக்கு 2 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்க உள்ளதாகவும் தொலைக்காட்சி ஒன்றில் தகவல் வெளியானது.

இதற்கு உடனடியாக கமல் தனது ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,

மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நாளை நமதே

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

கமல் பாஜகவின் இயக்கத்தில் நடிப்பவர் என்பதற்கு இது ஒரு சான்று என்று பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a Response