குழந்தைகளுக்குப் பிடிக்கிற பேய்ப்படம், சூர்யா நடிக்கும் மாஸ்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29ல் வெளியாகவிருக்கும் படம் மாஸ்.

இந்தப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது அப்போது படம் பற்றி வெங்கட்பிரபு பேசியது, இது குழந்தைகளுக்கும் பிடிக்கும் படம், இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லை, அதோடு குத்துப்பாட்டும் இல்லை. இந்தப்படத்தில் சூர்யா பெயர் மாசிலாமணி, அவரை எல்லோரும் செல்லமா மாஸ்னு கூப்பிடுவாங்க. அதுனாலதான் படத்தோட பெயரும் மாஸ்.
அமைக்காலமாக நிறையப் பேய் படங்கள் தமிழில் வந்துவிட்டது. ஆனால் இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமா, எல்லோருக்கும் பிடிக்கிறமாதிரிதான் இருக்கும், அதிகமா பயமுறுத்த மாட்டோம்.

சூர்யா சார் சீரியஸானவர் பார்த்து நடந்துக்கோங்கன்னு சொன்னாங்க ஆனா அவர் அப்படியில்ல, ஆயிடுச்சி. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் நடுவே ஓய்வறைக்குப் போகாம எங்களோட உட்கார்ந்து பேசிகிட்டிருப்பார். கார்த்தி சாரை விட சூர்யா சார் எனக்கு அதிக நெருக்கம் ஆயிட்டார்.
20 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது, பார்த்துட்டுச் சொல்லுங்க என்றார் வெங்கட்பிரபு.

Leave a Response