100 ஆண்டுகளில் இல்லாத மழை 80 அணைகளில் தண்ணீர் திறப்பு – தவித்து நிற்கும் கேரளா

இதுவரை இல்லாத அளவு கடும் பாதிப்புகளைகேரளா சந்தித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது….

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா மோசமான வெள்ளத்தைச் சந்தித்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

2.23 லட்சம் பேர் 1,500க்கும் மேற்பட்ட முகாம்ங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அறிவித்தள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவிட முன்வர வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம் காரணமாக கேரளாவில் 80 அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது என்றும்முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Response