கலைஞருக்கு மெரினாவில் இடம்கொடுப்பதுதான் மரியாதை – ரஜினி வேண்டுகோள்

திமுக தலைவர் மறைவைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தது திமுக.

ஆனால் அங்கு இடம் தர முடியாது என கைவிரித்துவிட்டது தமிழக அரசு.

இதற்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக தவிர அனைத்துக்கட்சிகளும் மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில்,

மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

Leave a Response