மீண்டும் சர்ச்சையில் பிக்பாஸ் 2 – இம்முறை என்ன சிக்கல்?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறவர்கள் செய்யும் செயல்களால் கமல் மீது விகர்சனங்கள் வரும். இப்போது அவர் பற்றியே புகார் வந்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் லூயிசாள் ரமேஷ் என்பவர், நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ்-2 என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது கட்சியை வளர்க்கும் வகையில் பேசுகிறார்.

ஆனால் அரசியல் அநாகரிகத்துடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஜெயலலிதாவை சர்வாதிகாரி போன்று சித்தரித்து இந்த நிகழ்ச்சியில் பேசப்படுகிறது.

ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்பது தெரிந்த விசயம். அதேசமயம் இது அந்த நிகழ்ச்சியின் விளம்பரத்துக்குப் பயன்படும் என்று நினைக்கிறார்கள்.

Leave a Response