
தினந்தோறும் விலை நிர்ணயம் என்ற பெயரில், கண்ணுக்குத் தெரியாமல் மக்களைக் கொள்ளையடிக்கின்றன எண்ணெய்நிறுவனங்கள். அதற்கு மோடி அரசும் உடந்தை.
கர்நாடகத் தேர்தல் பரப்புரை நடந்து வந்ததால், கடந்த 20 நாட்களாக (ஏப்., 24 முதல்) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் தொடர்ந்து இருந்து வந்தது.
மே 12 இல் தேர்தல் முடிந்தது. உடனே (இன்று மே-14 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் அதிகரித்து ரூ.77.61காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு23 காசுகள் அதிகரித்து ரூ.69.79 காசுகளாகவும் உள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கிறது என்பதற்கு இது சான்று என்கின்றனர்.


