கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி அணி அதிரடி வெற்றி

11வது ஐ.பி.எல்லின் 26 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் மட்டை பிடித்த டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, முன்ரோ (33) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இளம் வீரர் பிரித்வி ஷா, 38 வது பந்தில் ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். இவர், 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷாப் பன்ட் ‘டக்’ அவுட்டாக, மேக்ஸ்வெல் (27) ரன் அவுட்டானார்.

முதன் முதலாக அணித்தலைவராகக் களமிறங்கிய ஸ்ரேயாஸ், அரைசதம் கடந்தார். ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் 4 சிக்சர், 1 பவுண்டரி விளாச, மொத்தம் 29 ஓட்டங்கள் கிடைத்தன.

டெல்லி அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 219 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் (93 ஓட்டங்கள், 40 பந்து, 10 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணியின் ‘டாப் ஆர்டர்’ சரிந்தது. கிறிஸ் லின் (5), உத்தப்பா (1), நரைன் (26 ரன், 9 பந்து), ராணா (8) என, வரிசையாக கிளம்பினர். தினேஷ் கார்த்திக் நீடிக்கவில்லை. ஷுப்மன் (37), ஷிவம் (0) அடுத்தடுத்த கிளம்பினர். ரசலும் (44) போல்டாக, கொல்கத்தா தோல்வி உறுதியானது.

கொல்கத்தா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 164 ஓட்டங்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.

டெல்லி அணி, 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Response