
ஏப்ரல் 22 இரவு எட்டுமணிக்கு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகியன மோதின.
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டை பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 58 ஓட்டங்கள் (42 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சூரியகுமார் 72 ஓட்டங்கள் (47 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 3, தவால் குல்கர்னி 2, ஜெய்தேவ் உனத்காட் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 20 ஓவரில் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரகானே மற்றும் திரிபாதி சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் சேர்த்தது. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். இதேபோல் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் கவுதம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி அடையச் செய்தார். 2 பந்துகள் மீதமிருந்த நிலையில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
