ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தொடர்ந்து அனுமதி இல்லை என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளிக்கவில்லை என்றும் வந்துள்ள செய்தி குமரெட்டியாபுரம் களம் அமைத்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முடிவை பலரும் வரவேற்கின்றனர். ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் விருப்பம்,
இந்நிலையில் நடிகர் கமல் இது பற்றிக் கூறியிருப்பதாவது….
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.