தனி ஒருத்தியாக பேருந்தை மறித்த பெண்ணுக்கு ஸ்டாலின் பாராட்டு

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்று (06-04-2018) அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி இழுத்தடித்துக்கொண்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்ற கழக தோழர் பிரபு மற்றும் மக்கள் விரோத நியூட்ரினோ திட்டத்தைப் புகுத்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து இறந்த ம.தி.மு.க. தோழர் ரவிக்கும் இரங்கல் தெரிவித்து, முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த தீர்மானமாக, இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றிபெற்றுள்ள நிலையில், இத்தகைய வெற்றிக்கு துணை நின்ற அத்துனை கட்சிகளின் தலைவர்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், விவசாய சங்க நிர்வாகிகளுக்கும், வணிகர் பெருமக்களுக்கும், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து, இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவாக, உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்ற மனுவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் தந்திருக்கின்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 16 ஆம் தேதி, சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவு செய்திருக்கிறோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்ததும்,

நேற்று நடைபெற்ற முழுஅடைப்புப் போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தை ஒற்றை ஆளாக நிறுத்தி நம் உரிமைக்காக போராடுகிற போது பேருந்தை இயக்க கூடாது என மறியல் செய்த கழகத்தைச் சார்ந்த தெய்வநாயகி அவர்களை இன்று நேரில் வரவழைத்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Response