எடப்பாடி, ஓபிஎஸ் காவிரிக்காக உண்ணாவிரதம் – நாடகமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் போர்க்கோலம் பூண்டுள்ளது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று கடையடைப்பு நடக்கிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

காவிரிக்காக 1993 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போதும், 2007ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபொதும் ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் உண்மையாகவே போராடினார் என்றும் இப்போது இவர்கள் போராடுவது போல நாடகம் நடத்துகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.

Leave a Response