ரஜினி மக்கள் மன்றத்தில் குழு மோதல் – ரஜினி எரிச்சல்

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி அறிவித்த பிறகு ரஜினி ரசிகர் மன்றங்கள், ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றத்திற்கு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்விசயத்தில் பல்வேறு அதிருப்திகள் நிலவுகின்றன. புதிதாக வந்தவர்களுக்கும் வசதி படைத்தவரக்ளுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் எல்லா மாவட்டங்களிலுமே உட்பூசல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்நிலையில், தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வுக் கூட்டத்தில் காணொலி மூலம் நடிகர் ரஜினி பேசினார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி பேசியதாவது

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களுக்கு நல்லது செய்ய ஆண்டவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதவி கிடைக்கவில்லை என்று மன்றத்தினர் யாரும் பொறாமையில் செயல்படக் கூடாது. தேவையற்ற சண்டைகளைத் தவிருங்கள் என்றார்.

ரஜினியின் இந்தப்பேச்சு அங்கிருக்கும் பூசல்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

Leave a Response