வரிவிலக்கு இல்லையென்றதும் தமிழை மறந்த சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்பார்வையும், படத்தின் பெயரும் இன்று அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் என்ஜிகே.

அந்தப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் – யுவன் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று தமிழக அரசு சலுகை கொடுத்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் பெயர் வைப்பதே இல்லை.

அண்மையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வந்ததிலிருந்து படங்களுக்கு வரிவிலக்கு இல்லை. இதனால் ஆங்கில எழுத்துகளில் பெயர் வைத்திருக்கிறார்கள்.

Leave a Response