
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் ‘ஓ காதல் கண்மணி’ ஏப்ரல் 17 அன்று வெளியாவது உறுதியாகிவிட்டது. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் கருத்து இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்திலும் ஒர் அழகான காதலும் அதற்குள் இளைஞர்களைக் கவரக்கூடிய புதியவிசயமொன்றும் இடம்பெற்றிருக்கிறதாம்.
படம் முழுமையாகத் தயாரான பிறகு மணிரத்னம் மிகவும் உற்சாகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அந்த உற்சாகத்துடன் ஏப்ரல் 11 அன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்கள். மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான். துல்கர்சல்மான், படத்தை வெளியிடும் ஞானவேல்ராஜா ஆகியோர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்களாம்.


