அர்ஜுன் நடிக்கும் ஒருமெல்லியகோடு,ஸ்பானிஷ் படத்தைக் காப்பியடித்து எடுக்கப்படுகிறதா?


அர்ஜூன், ஷாம், மனிஷாகொய்ராலா, அக்ஷாபட் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஒருமெல்லியகோடு படத்தை ஏஎம்ஆர்.ரமேஷ் இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் ஏஎம்ஆர்.ரமேஷ் என்று சொல்லியிருக்கிறார்கள். அவரும், இது வழக்கமான படமாக இருக்காது திரைக்கதையில் வேறு ஒரு கோணத்தை உருவாக்கும் படமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜூனும் இது என் சினிமதாகேரியரில் புதுசு என்று சொல்லியிருக்கிறார். அவர் படத்தில் காவல்து¬அதிகாரியாக நடிக்கிறார். ஒரு வழக்கில் ஷாம் சிக்குகிறார். அப்போது இருவருக்குமிடையே நடக்கும் போராட்டம்தான் கதை சொல்லப்படுகிறது. இந்தப்படம் அண்மைக்கால வழக்கப்படி வேற்றுமொழிப்படத்தைப் பார்த்து எடுக்கப்படுகிறதென விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். மையக்கருத்தை எடுத்துக்கொண்டு தமிழுக்கேற்றவாறு மாற்றியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லையாம். காட்சிக்குக் காட்சி அந்தப்படத்தைப் பார்த்தே படப்பிடிப்பு நடக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. நம்மஊருக்கேற்ப சில மாற்றங்களைச் செய்யலாம் என்று உதவிஇயக்குநர்கள் சொன்னதை இயக்குநர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். அந்தப்படத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே எடுப்போம் அப்படி எடுத்தால் நிச்சயவெற்றி என்று இயக்குநர் ரமேஷ் சொல்லிக்கொண்டிருக்கிறாராம். அப்படி எந்தப்படத்தைக் காப்பியடிக்கிறார்கள்? என்றால் இந்தப்படம் திபாடி என்கிற ஸ்பானிஷ் படத்தைத் தழுவி எடுக்கப்படுகிறதெனச் சொல்கிறார்கள். அந்தப்படம் 2012 கடைசியில் வெளிவந்த படமாம். அண்மையில் வெளியான படங்களை எடுத்தால் தெரிந்துவிடும் என்பதைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். இது உண்மையா என்பதை இயக்குனர்தான் சொல்லவேண்டும்.

Leave a Response