ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ஏர்முனை நிதி – அமைச்சர் பாராட்டு

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திரட்டப்பட்ட ரூ 77,291 இன்று காலை ஹார்வர்டு தமிழ் இருக்கை தமிழக பொறுப்பாளர் மருத்துவர் திரு.ஆறுமுகம் முன்னிலையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.மாபா.பாண்டியராஜன் அவர்களிடம் காசோலையாக நேரில் கொடுக்கபட்டது.

இந்நிகழ்வில்,

ஏர்முனை மாநில தலைவர் என்.எஸ்.பி.வெற்றி,செயலாளர் சி.நா.சக்தி வேல்மணி,பொருளாளர் ஆர்.ஏ.பிரதீப்,வேலூர் மாவட்ட தலைவர் தயோகீஸ்வரன்,சுபாஷ், பா.பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடும் போராட்டங்களில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நிலையிலும் தாய்மொழி தமிழுக்காக நிதி கொடுத்த விவசாயப் பெருமக்கள் பாராட்டிற்குரியவர்கள் என அமைச்சர் கூறினார்.

Leave a Response