ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணையும் புதிய படம் இன்று தொடங்கியது

துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று (சனவரி 19,2018) தொடங்கப்பட்டது.

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 19) சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 2 நாட்கள் மட்டுமே சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து மும்பையில் விரைவில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என ட்வீட் செய்திருக்கிறார். இதன் மூலம் படம் தீபாவளி வெளியீடு என்று நம்பப்படுகிறது.

Leave a Response