சீமானுக்கு சுபவீ பாராட்டு – தொடரட்டும் நல்லுறவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனவரி 7,2018 அன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகளைப் பெரிதுபடுத்தி வைரமுத்துவுக்கு எதிராகக் கடும்சொற்கள் பேசப்பட்டுவருகின்றன.

வைரமுத்துக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல்தலைவர்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.

சனவரி 18,2018 அன்று நடந்த வேலுபிரபாகரனின் கடவுள் 2 படத்தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய சீமான், வைரமுத்து எங்கள் சொத்து அவ்ருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று பேசியதோடு, தமிழ்த்தேசியர்களுக்கும் திராவிட இயக்கத்தவர்க்கும் நடப்பது பங்காளிச்சண்டை இதற்குள்ளே நுழைந்து குளிர்காய நினைத்தால் உடையும் உங்கள் மண்டை என்று இந்துத்துவவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இப்பேச்சுக்கு, பேராசிரியர் சுபவீ வரவேற்பு தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
பங்காளிச் சண்டைக்குள் பகையாளி நுழைய இடம் தர மாட்டோம் என்று பாஜக வை எச்சரித்துள்ள நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டிற்குரியவர் என்று எழுதியிருக்கிறார்.

அவ்ருடைய இக்கருத்து நிறைய வரவேற்புகள். தமிழ்த்தேசிய இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் இணைந்து பயணிக்கவேண்டியது அவசியம் என்பதை இவ்வரவேற்புகள் உறுதிப்படுத்துகின்றன.

Leave a Response