பாண்டிராஜ் டைரக்சனில் கார்த்தி நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றும் தெலுங்கில் ‘சின்னபாபு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் கதாநாயகியாக சாயிஷா சைகல் நடிக்க இனொரு நாயகியாக ‘மேயாத மான்’ புகழ் ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா தனது ‘2டி’ நிறுவனம் சார்பாக தயாரிக்கும் இந்தப்படம் 2018 கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
அந்த போஸ்டரில் ‘பயிர் செய்ய விரும்பு’ மற்றும் ‘விவசாயி’ போன்ற வாசகங்களை பார்த்தபோது நிச்சயம் விவசாயம் சார்ந்த ஒரு கிராமத்து கதையை இந்த கூட்டணியிடமிருந்து எதிர்பார்க்கலாம் என தோன்றுகிறது.