‘ஜெகஜால கில்லாடி’யாக விஷ்ணுவின் புதிய அவதாரம்..!


‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி தாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு ‘ஜெகஜால கில்லாடி’ என டைட்டில் வைத்து ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக அதை அறிவித்துள்ளது.

தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பும் ஜரூராக நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, காமெடி வேடங்களில் யோகிபாபுவும் மொட்ட ராஜேந்திரனும் கலக்க உள்ளார்கள். இமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

Leave a Response