நடிகர் எஸ்.வி.சேகர் நடிகர்சங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட ட்ரஸ்ட்டி பதவியை சில காரணங்களுக்காக ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த மலேசிய காலை விழாவிலும் பல குளறுபடிகளைத்தான். அதில் அவர் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
“பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன். குறிப்பாக இயக்குனர் சங்கதலைவர் விக்ரமன், ஆர்.சுந்தரர்ராஜன், பார்த்திபன், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர்தான் நிர்வாக கோளாறு. இப்படி அரை குறையாக செய்வதற்கு எதற்கு பார்க் ஹோட்டலில் இத்தனை நாட்கள் இவ்வளவு ரூம் போட்டு நம் டிரஸ்ட் பணம் செலவழிக்கப்படவேண்டும்.?
நம் நடிகர் சங்க மூத்த நாடகக்கலைஞர்கள் சிலரை அழைத்துக் சென்று அரிச்சந்திர மயானகாண்டம் காட்சி நடித்திருந்தால் (15 நிமிடம் மட்டுமே வரும்), அது நீங்கள் நாடக கலைஞர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள் ஓட்டுக்காக அல்ல என்றாவது தெரிந்து இருக்கும். அதையும் செய்யவில்லை
அனைத்து மூத்த கலைஞனர்களுக்கும் கொடுக்கத் தெரிய வேண்டும். அதை எப்படி என்று நம் முன்னாள் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் திருந்த வாய்ப்பில்லை.
ஆகவே என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுகளுக்கு நான் உடன்பட முடியாது என்பதாலும் டிரஸ்டி என்ற பதவி நடிகர் சங்கத்தை பொருத்த வரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும், மற்ற சக கலைஞர்களுக்கு உங்களால் ஏற்பட்ட அவமரியாதைக்காகவும் எனக்களிக்கப்பட்ட டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்” என இவ்வாறு குறிப்பிட்டுள்ள எஸ்.வி.சேகர் இதுதவிர இன்னும் சில குற்றச்சாட்டுக்களையும் அடுக்கியுள்ளார்.