ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்.
கடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக தலைவர் நாசர் சாரிடம் கடந்த நான்காம் தேதியில் ஒரு கடிதம் கொடுத்து அதை ஒரு விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு தரவேண்டும் என்று கூறியிருந்தேன். ஒரு சூழ்நிலையில் பத்திரிக்கைக்கு அந்த கடிதம் கிடைத்து என்னிடம் கேட்ட போது பதில் கூறமுடியாத நிலையில் இருந்தேன். ஏனென்றால் ஒரு விவாதத்திற்கு பிறகு கிடைக்கும் தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் 2014 தென்இந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக முற்படும் அந்த காலகட்டத்திலிருந்து 2015 தேர்தல் காலகட்டம் வரை எங்களுடைய மிகமுக்கிய பேச்சு என்னவாக இருந்தது என்றால் நடிகர் சங்கம் என்பது ஒரு பொது அமைப்பு இந்த அமைப்புக்கு பொறுப்புக்கு வருபவர்கள் தன்னலம் இல்லாமல், சேவை மனப்பான்மையுடன், சங்க வளர்ச்சிக்காகவும் மட்டுமே செயல்பட்டு தன் கலை திறமைகளையும் வளர்த்து மற்றும் சில திட்டங்களை வகுத்துகிட்டால் நன்றாக இருக்கும் அதை தனிமனிதர்களுக்காக பயன்படுத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது அதில் வேறு பங்கிடுகள் இருந்து கொண்டுவருகிறது என்று தேர்தல் காலத்தில் முன்வைத்த முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. அதற்கு பிறகு நாங்கள் எல்லா உறுப்பினர்களை சந்திக்கும் போதும் இதை மிக முக்கிய கருத்தாகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பொது மனிதனாகவும் அரசியலற்று செயல் படுவோம் பொதுவாக செயல் படுவோம் என்று கூறினோம் இது ஊடக நண்பர்களுக்கு மே 1 முதலில்ருந்தே தெரியும் எல்லாம் இடங்களிலும் இதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள். தேர்தல் வரும் போது தேர்தலில் யாரையெல்லாம் பொறுப்பில் நிறுத்தலாம் என்று வரும்போது தலைவர் நாசர் சார், செயலாளர் விஷால், பொருலாளர் கார்த்திக், துணை தலைவர் பதவிக்கு நானும், கருணாசும் நிப்பதாக முடிவு செய்தோம். கருணாசிடம் அரசியல் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றோம். அவரும் நான் ஏற்கனவே புலிப்படை என்ற அமைப்பும், மேடைப்பேச்சும் என்று போய் கொண்டு இருக்கின்றேன் என்னை கொண்டு வந்து துணை தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நான் பொறுப்பாக முடியாது என்று தெளிவாக சொன்னார். அப்போது நாங்கள் கருணாசிடம் சொன்னோம் இந்த நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் பூச்சி முருகன் திராவிட இயக்கத்தில் உள்ளார், குட்டி பத்மினி பி.ஜே.பியில் இருகிறார்கள், குஷ்பு ஆதரவு தெரிவிக்கும் போது காங்கிரசில் இருந்தார்கள் இதனால் இங்கு அரசியல் இல்லை நாங்கள் அந்த மனநிலையில் இருகின்றோம் ஆனால் நீ உன் பொறுப்பில் இருக்கும் போது அரசியல் வராமல் பார்த்துக்கொள் என்றோம் அது முடிந்து போய்விட்டது. நாங்கள் தேர்தலில் நிற்கும் போது மிகப்பெரிய விமர்சனம் வந்தது அந்த கட்சியா இந்த கட்சியா என்று அப்போது அரசியல் சாயம் வந்து விட கூடாது என்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நமது கழகத்தை சார்ந்தவர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் நிற்க வேண்டாம் என்றார்கள். அதனால் எங்கள் குழுவில் இருந்த அக்கட்சியினர்கள் நிற்கவில்லை. நடிகர் சங்க தேர்தல் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக மாறியது ஏற்கனவே இருக்கும் குழுவை மீறி புது குழு வருகிறன்றது இவர்கள் கருத்து நன்றாக உள்ளது என்று ஒரு நிலை எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் வெற்றி பெற்ற முதல் நாளே அரசியல் சாயம் இருக்க கூடாது என்று முடிவு செய்தோம். அதன் பின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்தோம் அவர் தன் பழைய நினைவுகளை பகிர்ந்தார் அப்போது அரசியல் இல்லாமல் சங்கத்தை நடத்துங்கள் என்ற வார்த்தையை அவரும் அங்கு பதிவு செய்தார்கள். முதல் வாழ்த்து கலைஞர் ஐயா அவர்களிடம் இருந்து வந்தது அவரையும் சந்தித்தோம், விஜயகாந்த் அவர்களையும் சந்தித்தோம் அப்போதைய அரசியல் சூழ்நிலையை பார்த்தல் அவர்களுக்குள் அரசியல் போட்டி இருக்கும் இருந்தும் நாங்கள் பொதுவாக நடந்து கொண்டோம். அப்போதும் அவர்கள் அந்த கட்சியை சார்ந்தவர் இந்த கட்சியை சார்ந்தவர் என்று பேச்சு இருந்து கொண்டு தான் இருந்தது. எங்களுடைய நோக்கம் பொது தன்மை என்று அப்போதும் பதிவு செய்தோம். இந்த இரண்டு வருடத்தில் கார்த்தியும், விஷாலும் நான்கு படங்கள் நடிதுள்ளர்கள் அவை படங்களுக்கு 120 நாள் ஒதுக்க வேண்டும் அப்போது அவர்கள் எவ்வளவு நாள் பட பிடிப்பில் இருக்க வேண்டியது இருக்கும் அப்போது நாங்கள் இங்கு நிர்வாகத்தில் தலையிட்டு பொறுப்பை கவனித்துக்கொண்டோம் தினமும் அலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டிடத்தை மீட்டெடுப்பது, அதற்கான பணத்தை நீதிமன்றத்தில் இருந்து மீட்டெடுப்பது என்று பேசுவோம். மூன்று பொதுகூட்டம் நடத்தியுள்ளோம், கட்டிடதிற்காக நச்சத்திர கிரிகெட் நடத்தியுள்ளோம், இரண்டு விழாக்கள் நடத்தியுள்ளோம் இவ்வளவும் ஒரு குறிப்பிட காலகட்டத்தில் மிக சிறப்பாக கூட்டாக செய்து வந்துள்ளோம் இந்த இரண்டு வருடமாக எங்கள் நிர்வாக திறமையை நான் ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன், யாரையும் விட்டும் கொடுக்க மாட்டேன். எங்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு இருந்தது அதை நான் ஒற்று கொள்கின்றேன். கடந்த 4ம் தேதி விஷால் தேர்தலில் நிக்கிறார் என்று டி.வி செய்தியில் பார்த்தேன் எனக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனையே நாசர் சார், கார்த்தி அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்களும் அது பற்றி தெரியவில்லை என்றார்கள். அரசியல் என்பது வேறு களம் மக்களுக்கான தொடர் ஓட்டம், நடிகர் சங்கம் என்பது 3500 பேர் கொண்ட ஒரு சிறிய தளம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என உள்ளது. தயாரிப்பாளர்கள் பிரச்சனைகள் நடிகர்கள் சங்கத்தின் மீது விலாது. விஷால் அரசியலில் வருவது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதனால் நம்மிடம் சொல்லவில்லை என்று நினைத்தேன். நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் வேறு எதிலும் இருக்க கூடாது என்று கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை. தார்மீக முறையில் பார்க்கும் போது பொதுவான முறையில் இருக்க முடியவில்லையே என்று நினைக்கும் போது ரொம்ப சங்கடமாகத்தான் இருக்கின்றது. இந்த தொடர் ஓட்டம் சம்பந்தம் இல்லாமல் என்னையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. நான் விஷாலை தனிமனித உரிமை என்று சொன்னால் அப்போ ஏன் அப்படி அன்று சொன்னீர்கள் என்று கூறுவார்கள். சம்பந்தமே இல்லாமல் என் மீது விமர்சனம் வருவதும், பொறுப்பில் இருந்தும் என்னால் பதில் கூற முடியாமல் இருப்பதும் எனக்கு தேவையில்லாத ஒன்றாக நினைக்கின்றேன். நான் கூறிய விஷியத்திற்க்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைகின்றேன் அது பதவியில் இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி. அப்போது நான் நாசர் சார்க்கு ஒரு கடிதம் எழுதி இந்த தேதியில் இருந்து நான் பதவியில் இருந்து விலகிக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதை இப்போது வெளியிட வேண்டாம் ஏனென்றால் விஷாலுக்கு அது ஒரு பின்னடைவாக இருக்க வேண்டாம் விஷால் என் நெருங்கிய நண்பர். ஒரு கருத்தை கூறி அதற்க்கு மாறுபட்டு நடப்பதினால் இந்த முரண்பாடு ஏற்பட்டது. இப்போது விஷால் அவர்கள் அரசியல் நோக்கத்துடன் உள்ளார் என்பது தெரிந்துவிட்டது ஒரு தெளிவும் கிடைத்தது. செயற்குழு உறுப்பினர்கள் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். நான் அந்த கடிதத்தில் சங்கம் தொடர்பாக மலேசியா செல்ல வேண்டிய நேரத்தில் அதில் கவனம் செலுத்தாமல் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன். இந்த இரண்டு நாட்களாக திரைத்துறையில் இருப்பவர்கள், நாடக கலைகர்கள் அனைவரும் என்னை தொடர்பு கொண்டு உங்கள் கருத்து உண்மையாக இருக்கின்றது அனைவரும் கூட்டாக செயல்படுங்கள் என்று கூறினார்கள். இப்போது நான் பதிவு செய்வது என்னவென்றால் கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும், மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் நல்ல முறையில் செயல் பட வேண்டும். கார்த்திக், விஷால் என்னைவிட வயதில் சிறியவர்கள் நான் என்ன சொன்னாலும் கேட்க கூடியவர்கள், நாசர் சார் என்னைவிட மூத்தவர், நான் எது சொன்னாலும் அதை எடுத்துக்கொள்வார்கள் நான் அவர்களை விட ஒரு படி மேல் சென்று பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதினால் நான் அந்த பொறுப்பை மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்க கட்டிடதிக்காக என் பணியினை தொடர்ந்து செய்வேன். என் தனி பட்ட கருத்தில் எந்த மற்று கருத்தும் இல்லை. நடிகர் சங்க கட்டிடதிற்காக பெரிய நடிகர்களுடன் நட்பை பெற்றும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவுவதில் மிக முக்கிய பங்கு உள்ளது. நடிகர் சங்கத்தில் இருப்பதில் இருந்து அரசியலுக்கு பயன் படுத்துவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. விஷால் நடிகர் சங்கத்தில் சிறப்பாக செயல்பட்டாரா இல்லையா என்று நாங்கள் தான் சொல்ல வேண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் யாரும் சொல்ல வேண்டாம். விஷால் எந்த அளவு நடிகரோ அதே அளவு தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.