‘கஜினிகாந்த்’ படம் ரஜினிகாந்த்தை அவமதிக்கிறதா..?


ஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவே தயாரிக்க முன்வந்தார். ‘கஜினிகாந்த்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின்

ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தைப் போன்று ஆர்யா இருப்பது போன்று ‘கஜினிகாந்த்’ ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்திருக்கிறது படக்குழு.

ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Response