சாதி, மத வேறுபாடற்ற சமத்துவச் சமூகம் படைக்க அண்ணல் வழி நடப்போம் – சீமான் உறுதி

அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் சாதி, மத வேறுபாடற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என அனைவரும் உறுதியேற்க சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு!
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்று விசமாகட்டும்!ஆயிரமாண்டுகள் நாம் அடிமையாக வாழ்வதைவிட, ஒரு நொடியேனும் வீரமாகச் சுதந்திரமாக வாழ்ந்து சாவது மேலானது!

அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடிவரும்!இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும்!கோயில்களில் எப்போதும் ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களே ஒழிய; சிங்கங்களை அல்ல!

மதிப்புமிக்க நம் உரிமைகளைச் சில ரொட்டித்துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது!கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்!அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய நினைவுநாள் இன்று (06-12-2017).

அந்த மகத்தான மாமேதையின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் எந்த உயர்ந்த நோக்கத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடாற்றினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றி சாதி, மத வேறுபாடற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என்ற உறுதியை ஏற்போம்!

சாதி ஒழிப்பு! சமூக நீதி!

இந்தக் கணத்தில் அண்ணல் அம்பேத்கரின் வழியில் நின்று அயராது அரும்பாடாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நம் புரட்சிகரமான புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்!

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response