“இந்த ‘தீரன்’ சத்தம் போட்டு பேசமாட்டான்” ; கார்த்தி..!


‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் ; அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்துள்ளார் கார்த்தி. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். சிறுத்தை கார்த்திக்கும் தீரன்’ கார்த்திக்குமான வித்தியாசத்தை இதில் வெளிப்படுத்தியுள்ளாராம் கார்த்தி.

“போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையாக தீரன் கதை நாம் சொல்கிறோம். தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ் தான் இந்த படத்தின் கதை. நான் நடித்த கதாபத்திரங்களிலேயே எனக்கு “ நான் மகான் அல்ல “ படத்தில் நான் செய்த கதாபாத்திரம் தான் மிகவும் பிடிக்கும். என்னென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியே அந்த படத்தில் இருப்பேன்.

தீரன் வீட்டில் இருக்கும் போது ‘நான் மகான் அல்ல’ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான். போலீசாக ஸ்டேஷனில் இருக்கும் போது வேறு ஒரு விதமாக இருப்பான். மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள பிட்னசையும், நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குனாதீசியங்களை, உடல்மொழியையும் பயன்படுத்தியுள்ளோம். இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல் தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்யே பாடலாம். நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ அப்படி தான் என்னுடைய தூரமும் இந்த படத்தில் இருக்கும்” என்கிறார் கார்த்தி.

Leave a Response