‘அண்ணாதுரை’ பாடல்களை இலவசமாக வழங்கும் விஜய் ஆண்டனி..!


விஜய் ஆண்டனி. தான் நடித்துள்ள படத்தை நவ-3௦ல் ரிலீஸ் செய்கிறார். ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நாளை (நவ-15) நடக்கவுள்ளது. இந்த ‘அண்ணாதுரை’ படத்திற்காக ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான ‘www.vijayantony.com ‘ மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம்.

இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் ராதாரவி, காளி வெங்கட், ஜ்வல் மேரி, நளினிகாந்த், ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார்.

Leave a Response