புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் பிரியன் சென்னையில் இன்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
பிரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் பாலுமகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ‘மூன்றாம் பிறை’, ‘சந்தியராகம்’, ‘யாத்ரா’, ‘நீங்கள் கேட்டவை’ என பாலுமகேந்திரா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.
கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி நாயகர்களின் ப்டங்களில் ஒளிப்ப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார்.
‘தொட்டாசிணுங்கி’, ‘பொற்காலம்’, ‘தேசியகீதம்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘தெனாலி’, ‘ஸ்டார்’, ‘மஜ்னு’, ‘தமிழ்’, ‘பாலா’, ‘சாமி’, ‘கோவில்’, ‘அருள்’, ‘உதயா’, ‘ஐயா’, ‘ஆறு’, ‘வல்லவன்’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘வேல்’, ‘சேவல்’, ‘தோரணை’, ‘சிங்கம்’, ‘வேலாயுதம்’, ‘சிங்கம் 2’, ‘பூஜை’, ‘சிங்கம் 3’ என ப்ரியன் ஒளிப்பதிவு செய்த படங்களின் பட்டியல் பெரிது.
இயக்குநர் ஹரியின் ‘வேங்கை’ படத்தைத் தவிர எல்லாப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘சாமி 2’ படத்துக்கும் பிரியன்தான் ஒளிப்பதிவாளர்.
இந்நிலையில் ப்ரியன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடைய திடீர் மரணம் திரையுலகினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.