வீரமிக்க மண்ணில் பிறந்தவன், இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் – தினகரன் அதிரடிப் பேட்டி

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்பட 175க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரி சோதனை நடந்து கொண்டிருக்கும்போதே செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன். அப்போது அவர் கூறியவற்றின் ஒரு பகுதி….

அடையாறில் உள்ள எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையில்லை. வருமான வரித்துறை சோதனையில் பின்னணியில் உள்ள கட்சியை தமிழகத்தில் காலூன்ற விட மாட்டோம்.ஒரு கட்சியை அழித்து, மற்றொரு கட்சி இங்கே வளர முடியாது.வருமானவரித்துறை சோதனைக்கு பின்னால் மத்திய அரசு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

வருமான வரித்துறை சோதனை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது, சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம். ஜெ.ஜெ. டிவியை முடக்கியது போல் ஜெயா டிவியை முடக்க முயற்சி நடக்கிறது; யாரையோ காப்பாற்றும் முயற்சியாகக்கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம்.எங்களை மிரட்டிப்பார்க்கவே வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது,வீரமிக்க மண்ணில் பிறந்தவன், இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.எங்கள் குடும்பம் யாருக்கும் பயப்படாது.

புதுச்சேரியில் உள்ள எனது பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது,பண்ணை வீட்டில் வருமான வரி அதிகாரிகள் எதையாவது வைத்து எடுத்துவிடக் கூடாது.

நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது.அதற்காகவே இந்த சோதனை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வருமான வரி சோதனை நடந்துகொண்டிருக்கையில் தினகரன் வீட்டில் கோ பூஜை நடந்தது. அதில் தினகரன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Leave a Response