
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி குறித்தும், பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் மணி குறித்தும் காட்சிகள் உள்ளன. எங்கள் பா.ஜ.க திட்டங்களை, கொள்கைகளை எப்படி நீங்கள் தவறாக சித்தரிக்கலாம் என இதை கண்டித்து பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கியே ஆகவேண்டும் என்று தமிழிசை தொடர்ந்து பிடிவாதம் பிடித்தார்.. தயாரிப்பாளர் தரப்புக்கு மிரட்டலுடன் இரண்டு நாட்கள் கெடு விதிக்கப்பட்டதாகவும் சொல்லபடுகிறது. இதனை தொடர்ந்து மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமி, குறிப்பிட்ட காட்சிகளை நீக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பா.ஜ.கவின் அராஜக போக்கு என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.


