மெர்சலில் அட்லி என்ன செய்திருக்கிறார்?- பிரித்து மேயும் பிரியாகுருநாதன்

மெர்சல் …..
விஜய் ரசிகர்களுக்காக படம் ஆஹா ஓஹோனு சொல்லனுமா?? இல்லை உண்மையை சொல்லி விஜய்க்கு புரியவெக்கணுமான்னு தெரியலை..

படத்தை பார்த்தால் முழுக்க அரசியலுக்கு நான் வந்துட்டேனு சொல்லி இருக்கார். அதற்கு முதல் படி ஆங்காங்கே வாத்தியார் படங்களை போட்டு காட்டி இருக்கார். வாத்தியார் பார்முலா தான் பெரும்பாலும் படத்தில். ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸ், மருத்துவத்துறை வியாபாரமாவதற்கு எதிராகப் பேசிய புள்ளிவிபர வசனங்கள், இலவச டி.வி, க்ரைண்டர், மிக்ஸி எல்லாம் இலவசமா கொடுக்குற ஊர் இது… மருத்துவ வசதிகளை இலவசமா கொடுக்க முடியாதா’ என பஞ்ச் பேசுவது, படத்தின் டைட்டில் கார்டு போடும்போது, தலைமைச் செயலக மாதிரிக் கட்டிடத்திற்குள் விஜய் நுழைவது என அரசியல் என்ட்ரியை குறியீடாகவே காட்டியிருக்கிறார்கள்.

சரி மெர்சல் என்ன சொல்ல வருதுன்னு பார்த்தால் ….
கொஞ்சம் ரமணா , கொஞ்சம் இந்தியன் , கொஞ்சம் எங்க வீட்டு பிள்ளை, கொஞ்சம் தெறி, கொஞ்சம் விருமாண்டி , கொஞ்சம் அபூர்வ சகோதரர்கள் கொஞ்சம் விக்ரம் வேதா …

எல்லாத்தயும் ஒண்ணா கலந்து ஒரு மிக்ஸ்ட் ஊத்தப்பம்
அவ்வளவு தான்…

அட்லீ, விஜய் வச்சு சொதப்பி இருக்கார். ராஜா ராணி டீம் அப்படியே போட்டு ……

யார் சொதப்பினாலும் விஜய் தன் பங்கை சரியா செய்திருக்கார்.

விஜய் ஒன் மேன் ஷோவாக படம் முழுவதும் காலில் சக்கரம் கட்டி ஓடி இருக்கார் . ஒரே நேரத்தில் மருத்துவராக இருந்துக்கொண்டு, அப்படியே மேஜிக் செய்யும் காட்சிகள் படத்தில் உண்மையாகவே, இரண்டும் ஒன்றோடு ஒன்று வித்தியாசப்பட்டதா என்றால் இல்லை. விஜய் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கின்றார். ரொம்ப சவாலான விஷயம் தான்.. ஆனால் விஜய் பத்தி குறை சொல்ல ஒண்ணுமே இல்லை படத்திலே ….. எல்லாமே அட்லீயின் பலவீனம் தான்.

மதுரை அருகே கிராம மக்களுக்கு நல்லது செய்யும் வெற்றிமாறன் விஜய், தனது கிராமத்து மக்களுக்காக தனது சொந்த காசை போட்டு மருத்துவமனை கட்டுகிறார். ஆனால் மருத்துவ தொழிலை சேவையாக செய்யமால் தொழிலாக நினைக்கும் எஸ்.ஜே.சூர்யா, அந்த மருத்துவமனையை நயவஞ்சமாக தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டுவிடுகிறார். நித்யாமேனனின் பிரசவத்தை வேண்டுமென்றே சிசேரியன் ஆக்கும் எஸ்.ஜே.சூர்யா, எதிர்பாராமல் நித்யாமேனன் இறந்துவிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதை நேரில் பார்த்த விஜய்யை கொல்கிறார். இறந்தே பிறந்ததாக கூறப்படும் குழந்தையும், ஏற்கனவே உள்ள குழந்தையும் இரண்டு விஜய்யாக மாறி எஸ்.ஜே.சூர்யாவை எப்படி பழி வாங்குகின்றனர் என்பதுதான் மீதிக்கதை.

கிராமத்து தலைவர் வேடம், மேஜிக்மேன் வெற்றி வேடம், மருத்துவர் மாறன் வேடம் என மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ளார். ரொம்பவே முயற்சி செய்திருக்கார் விஜய். ஆனால் கதை எல்லாம் பழைய பஞ்சாங்கம். இதை ஒரு பத்து வருஷம் முன்னமே எடுத்திருக்கலாம்னு சொல்ற அளவுக்கு தான் இருக்கு.

‘இன்று சிசேரியன் குழந்தை என்றால் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள், இன்னும் 30 வருடம் கழித்து சுகபிரசவம் என்றால் ஆச்சரியமாக பார்ப்பார்கள்’ என எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனம் இப்போ இருக்கும் சூழலுக்கு அது எப்பயோ வந்திருச்சேன்னு சலிச்சிக்க வெக்குது , பழைய நியூஸ் அது .

சத்யராஜ், காஜல், சமந்தா இவர்கள் எல்லாம் படத்தில் இருக்கின்றார்கள். ஆனால், ஏன் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மட்டுமில்லை இயக்குனரே மறந்துவிட்டார். நித்தியா மேனன் மட்டுமே படத்தின் நாயகின்னு சொல்லிக்கிற அளவுக்கு இருக்கு. சமந்தாவும், காஜல் அகர்வாலும் ஒரு டூயட் பாடலுக்கும் படத்தின் கதைக்கு சம்பந்தமே இல்லாத சில காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்

படத்திலே தன் நடிப்பபை வச்சு விஜய் மட்டுமே மிரட்டி இருக்கார்.

வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்காரேன்னு பார்த்தால் , அவரும் பழைய டயலாக் , பழைய காமெடி பண்ணிட்டு சொதப்பிருக்கார் …

மொத்தத்துல மெர்சலா வரவேண்டிய படத்தை அட்லீ “சிலாக்கி டும்” பண்ணிட்டார். -பிரியாகுருநாதன்

Leave a Response