மெர்சல் -விமர்சனம்


#மெர்சல்

நகரத்தில் ஏழை எளிய மக்களுக்கு வெறும் 5 ரூ மட்டும் வாங்கிகொண்டு நியாயமான முறையில் மருத்துவம் பார்த்துவருகிறார் மாறன் விஜய் , ஆனால் இவர் திடீர் திடீரென்று மருத்துவத்துறையில் இருக்கும் சிலரை மர்மமான முறையில் கொல்கிறார் , அதனால் அந்த கொலையாளியை போலிஸ் சத்யராஜ் தேடுகிறார் , இன்னொருபுறம் தன் நண்பர்கள் ஒவ்வொருவராக பழியாவதை கண்டு கோபம்கொள்ளும் மருத்துவர் டேனியல் ( எஸ்.ஜே.சூர்யா) அந்த கொலை செய்யும் விஜயை வெறிகொண்டு தேடி வருகிறார் , ஒரு கட்டத்தில் அந்த கொலைகாரன் விஜய்தான் என்று தெரியவருகிறது , ஒரு புறம் போலிஸ் அரெஸ்ட் செய்ய தேடிவர இன்னொருபுறம் டேனியலின் ஆட்கள் மாறனை கொல்ல வருகிறார்கள் அப்போதுதான் மெஜிசியன் வெற்றி விஜய் அங்கு அவரை காப்பாற்றுகிறார் , அவர்கள் இருவர் என தெரியருகிறது . அவர்களுடைய பிளாஸ்பேக்கில் தன் தந்தை தளபதி வெற்றிமாறன் தன் சொந்த கிராமத்தில் மக்கள்நலனுக்காக கட்டும் இலவச மருத்துவமனையை அபகரிக்க முயல்கிறார் இதைதெரிந்து கொள்ளும் தளபதியும் அவர் மனைவியும் கொல்லப்படுகிறார்கள் , அதிலிருந்து தப்பும் அந்தகுழந்தைகள்தான் வெற்றியும் மாறனும் , இதன்பிறகு அவர்கள் ஒன்று சேர்ந்து எப்படி டேனியலை அழித்தார்கள் , தன் தந்தையின் எப்படி நிறைவேற்றினார்கள் என்பது மீதி கதை .

விஜய் சார் ஹேட்ஸாப் , மிகப்பெரிய உழைப்பு அதுவும் அந்த தளபதி கேரக்டரும் ,மெஜிசியன் கேரக்டரும் அருமை . சோசியல் மெசேஜ் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பண்ணுவதில் மகிழ்ச்சி . இளமையின் ரகசியம் என்னவோ .

மூன்று ஹீரோயின் இருந்தும் மனதில் நிற்பது நித்யாமேனன் கதாபாத்திரம் கனமானது அவர் உடல் போலவே , மற்ற இரு ஹீரோயினும் ஊறுகாய் . வடிவேலு வழக்கம்போல அசத்தல் .

ரொம்ப சுமார் வில்லன் கேரக்டர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு , ஏதோ ஒரு அளவுக்கு தன் நடிப்பால் தேற்றுகிறார் அவர்.

சத்யராஜ் , சத்யன் எல்லாம் இருக்கிறேன் என்கிறார்கள் .

பாரட்டப்பட வேண்டிய இருவர் ரஹ்மான் சார் , கேமராமேன் #விஷ்ணு , இருவரும் இந்த படத்தை தாங்கி பிடிக்கிறார்கள் .

மருத்துவதுறையின் அவலங்களை காட்சிகள் மூலமாகவும் , வசனங்களில் கொண்டு வந்ததும் அருமை .

இந்த கதைக்கு ஏன் விஜேந்திர பிரசாத் ?

அடுத்த சீன் இதுதான் என்பதும் மிக நீளமான பிளாஸ் பேக்கும் , ஆவரேஜ் பிஜிஎம் , அதிகமான பட்ஜெட் , ரொம்ப லெங்க்த் போன்றவை இந்த படத்தின் குறைகள்

ஒரு திருவிழா காலத்தில் வந்திருக்கும் ஒரு மாஸ் கமர்சியல் படம்.

Leave a Response